Latest News

June 14, 2015

கோதபாய தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்குள் பிரவேசிக்க முயற்சி?
by Unknown - 0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமராக நியமிக்கப்பட்டால் கோதபாய ராஜபக்ஸ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பாதுக்க பிரதேச விஹாரை ஒன்றில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தாம், அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக கோதபாய ராஜபக்ஸ மறுத்திருந்தார்.

எனினும், கோதபாய ராஜபக்ஸவின் இந்த அறிவிப்பானது ஒர் தந்திரோபாய நகர்வு எனவும், சகோதரரை தேர்தலில் வெற்றியீட்டச் செய்யும் நீண்ட கால நோக்கில் இவ்வாறு அரசியலிலிருந்து விலகியிருப்பதாக காண்பித்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கோதபாய ராஜபக்ஸ நாடு முழுதிலும் மஹிந்த ஆதரவு வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ள போதிலும், தேர்தலில் நேரடியாக போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

« PREV
NEXT »

No comments