புதிய அரசாங்கத்தின் கீழ் வடக்கில் 59 ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டிருக்குமாயின் அவற்றை பெயரிடுமாறு ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சவால் விடுத்துள்ளது.
இந்த சவாலுக்கு அவரால் பதிலளிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர், அமைச்சர் கபீர் ஹசீம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் 59 ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குற்றம்சுமத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவரினால் அனுப்பப்பட்ட இந்த செய்தியை முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும வாசித்தார்.
எவ்வாறாயினும். தற்போதைய ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அரசாங்கமோ வடக்கில் எந்தவொரு முகாமையும் அகற்றவில்லை என கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்றும் போலியான கருத்துக்களை வெளியிட்டு பொது மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.
கடந்த அரசாங்கத்தி;ன் போதே பல ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.
ராணுவத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அரசாங்கம் விடுவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹி;ந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் ராணுவத்தினர் சுவீகரித்திருந்த 11 ஆயிரம் ஏக்கர் காணியில் 5 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது
தமது ஊழல்கள் மற்றும் மோசடிகளை மறைத்துக்கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி விடுதலைப் புலி மத்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விட்டதாக கபீர் ஹசீம் குற்றம்சுமத்தியுள்ளார்.
No comments
Post a Comment