Latest News

June 14, 2015

பீற்றசனுக்கு ஆதரவாக மஹேல!
by Unknown - 0

இங்கிலாந்து கிரிக்கட் ஆட்டக்காரர் கெவின் பீற்றசன் இங்கிலாந்து தேசிய அணியில் இடம்பெறாதது துரதிஷ்டவசமானது என மஹெல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவரின் திறமையான கிரிக்கட் ஆட்டத்தை இங்கிலாந்து அணி பயன்படுத்த தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் இடம்பெறும் நெற் வெஸ்ட் ரீ20 போட்டியில் சசெக்ஸ் மற்றும் சரே அணிகள் பங்குகொள்ளும் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் மஹெல ஜயவர்தன மற்றும் கெவின் பீற்றசன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

மிகுந்த அனுபவத்தைக் கொண்டுள்ள கெவின் பீற்றசன், அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெறும் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்படி அவர் இணைத்துக் கொள்ளப்பட்டால், நிச்சயமாக புதிய விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தையும் உந்து சக்தியையும் வழங்க அவரால் முடியும் எனவும் மஹெல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

34 வயதான கெவின் பீற்றசன், கடந்த வருடம் அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டி ஒன்றில் இங்கிலாந்து தேசிய அணியில் இறுதியாக விளையாடினார்.

இங்கிலாந்து சார்பாக இவர் 104 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 8 ஆயிரத்து 181 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments