இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜூலை 6ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்த விடயம் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தின் தலைவர் காமினி பொன்சேக்கா தெரிவித்தார்.
இதற்கமைய, ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளில் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான பொறுப்பு மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment