யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திகுள்ளிருந்து அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீள்குடியேற்ற அமைச்சர் டீ எம் சுவாமிநாதன் இன்றையாதினம் நேரில் பார்வையிட்டுள்ளார்.
இன்றையதினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து மேற்படி பகுதிகளுக்கு அமைச்சர் சென்றிருந்தார்.
இதேவேளை கீரிமலை பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளையும் அமைசசர் பார்வையிட்டார் இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் மாவைசேனாராஜா,சரவணபவன் மற்றும் சுமந்திரன்இராணுவத்தினரும் விஜயகலாவும் கலந்துகொண்டார்
காணி விடுவிக்கப்பட்டு அதற்கான வீதி விடுவிக்கப்படாமை, தோட்டக்காணி விடுவிக்கப்பட்டு குடியிருப்பு காணி விடுவிக்கப்படாமை போன்று பல்வேறு பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன. இவற்றை நேரில் அவதானித்த அமைச்சர் குழுவினர், இராணுவத்தினருக்கு தெளிவுபடுத்தி அது சம்பந்தமான அறிக்கையைத் தரும்படி அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
செய்தி எஸ்.செல்வதீபன்




No comments
Post a Comment