நேற்று பிரித்தானியாவில் நடைபெற்ற 18 வது நடேஸ்வரா நாள்.
நேற்று காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணிவரை Banister Sports Centre, Uxbridge Road, Harrow Weald, HA3 6SW, பிரித்தானியாவில் கங்கேசன்துறை நடேஸ்வரா பாடசாலை பழைய மாணவர்களால் 18 வது நடேஸ்வரா நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 30 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் அனைத்து நான்கு அணிகளையும் வீழ்த்தி வல்வை நீலம் (Valvai Blues) அணி வெற்றிவாகை சூடியது.
வல்வை நீலம் (Valvai Blues ) அணிக்கு ராஜூ அவர்கள் தலைமை தாங்கினார். விளையாட்டு வீரர்களாக ராஜூ, குமரசேன், அசோக், சுரேன், மதன், சங்கர், மதி மற்றும் பரா களமாடினார்கள். இதில் மதன் உதயணன் நடைபெற்ற போட்டியின் சிறப்பு உதைப்பந்தாட்ட வீரர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
செய்தி மற்றும் படங்கள் உதவி: மனிமாறன்
















No comments
Post a Comment