அன்பான தமிழ் மக்களுக்கு இனிய வணக்கங்கள் இன்று ஈழத்திலும் சரி புலம் பெயர் தேசங்களிலும் சரி எம் தமிழ் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகள் என்று கருதுகிறவர்களையும் சிங்கள அரசும் சர்வதேசமும் திட்டமிட்டு தமது வலைக்குள் சிக்க வைக்க முயலுகின்றது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு பகுதியில் மக்களால் பல கிரயங்களை கொடுத்து தமக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று நம்பி தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்திருந்தார்கள்.
ஆனால் இன்று அதில் இருக்கும் சில உறுப்பினர்கள் அரசின் கைக்கூலிகளாக செயல்படுவது வேதனை அளிக்கின்றது.
அவர்கள் அரசின் கபடத்தனத்திற்கு விலை போகிவிட்டார்கள் என்பது அண்மையில் வடமாகணத்தின் முதலமைச்சர் வெளியிட்ட ஓர் அறிக்கை சுட்டிக்காட்டி நிற்கிறது
ஒரு சில அற்ப சொற்ப சலுகைகளுக்காக சிலர் விலை போனது வேதனையளிக்கின்றது.
அதை விட இலங்கையின் சிங்கள அமைச்சர்கள் சிலர் புலம் பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் ஒரு சில பிரதிநிதிகளை சந்தித்து வந்தமையும் வேதனையளிக்கின்ற ஒரு விடயம்.
எதற்காக இந்த சிங்கள தேசம் இந்த காய்நகர்தல்களை மேற்கொள்கின்றது இவ்வளவு பணத்தை கொட்டி தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு கொட்டிக் கொடுக்கின்றது அவர்கள் மேலுள்ள பாசமா? இல்லவே இல்லை
புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்கள் எல்லாம் புலிகள் என்று
கூறியவர்கள் இன்று எப்படி சாதாரண மக்களாக எண்ணுகிறார்கள்?
சிந்தியுங்கள்!!! அன்பான மக்களே இது அன்பானதும் அவசரமானதுமான அறிக்கை இது எதற்கு இந்த சிங்கள தேசம் இப்படி கபட நாடகத்தை போடுகின்றது தெரியுமா? செப்ரம்பர் மாதம் ஐநாவில் நடக்க இருக்கும் கூட்டத்தொடரில் கையளிப்பதற்காக நாடுகடந்த அரசினால் ஆரம்பிக்கப்ட்ட கையெழுத்து சேகரிக்கும் திட்டம் இன்று பல்வேறு அமைப்புக்களாலும் வெற்றிகரமாக செயல் பட்டு வருகின்றது.
இதை பொறுக்கமுடியாத சிங்கள தேசமும் அதற்கு உதவிய சில நாடுகளும் தாங்களும் இதில் மாட்டி விடுவோம் என்ற பயத்தில் இந்த தந்திரமான நடவடிக்கை மூலம் தமிழர்களை சிதறடித்து அவர்களின் இந்த செயல் பாட்டைமுடக்கு வதற்கு முனைகின்றது ஆகவே அன்பு தமிழ் தலைவர்களே அன்பான தமிழ் மக்களே தமிழ் இளைஞர் ஒன்றியத்தினராகிய நாங்கள் உங்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
சிங்கள அரசினதும் அதற்கு துணைபோன நாடுகளின் வலைக்குள் விழுந்து விடாமல் அற்ப சொற்ப காரியங்களுக்கு விலை போமல் தமிழர்களாக உறுதியோடு நின்று இந்த இறுதி சந்தர்ப்பமாக பயன்படுத்தி கையெழுத்து சேகரிப்பு செய்து இலங்கை அரசை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டணை வாங்கி கொடுப்போம் தமிழர்களாக ஒன்று படுவோம்.
இதில் உள்ள ஊடக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் எமது இந்த கோரிக்கையை அனைத்து ஊடகங்களிலும்வெளியிட்டுமக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
தமிழ் இளைஞர் ஒன்றியம்
தமிழுக்காக!!! என்றும் தமிழ் மக்களுக்காக!!!

No comments
Post a Comment