Latest News

June 03, 2015

வடக்கில் திட்டமிட்ட வகையில் போதைப் பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது – சீ.வீ.விக்னேஸ்வரன்
by Unknown - 0

வடக்கில் திட்டமிட்ட வகையில் போதைப் பொருட்கள் இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இளைஞர் கிளர்ச்சிகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டவாறு போதைப் பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் பரிசளிப்பு விழாவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடுவதனை விரும்பவில்லை எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் கிளர்ச்சி வெடிக்கும் என அஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூளையற்றவர்களாக சுதந்திரம் பற்றி சிந்திக்காதவர்களாக வடக்கு இளைஞர்கள் இருக்க வேண்டுமென இந்தத் தலைவர்கள் விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி கடந்த அரசாங்கங்களை அழுத்தங்களுக்கு உட்படுத்தியதாகவும், யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வர வெளிநாட்டு உதவியுடன் பாரியளவில் பொருட்ச் செலவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments