Latest News

June 08, 2015

பதவி வேண்டாம், ஐ.தே.கட்சியை விரட்டியடிப்பதே நோக்கம்-நிமல்
by Unknown - 0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சிலர் இரு வேறு கருத்துக்களை ஒருங்கே கொண்டு செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வெளிப்படையாக விருப்பம் போன்று காட்டிக் கொள்ளும் சிலர் மறைமுகமாக காலைப் பிடித்து இழுக்கின்றனர். ஐ.தே.கட்சியும் இதுபோன்றதொரு நிலைப்பாட்டையே கைக்கொள்கின்றனர். ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20 ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்ரீ.ல.சு.கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து மக்களிடம் அதிகாரத்தைக் கேட்பது தேசிய அரசாங்கம் அமைப்பதற்கல்ல. எமக்கு பெரும்பான்மைப் பலத்தைத் தாருங்கள். அப்போது, யாருடனும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான அவசியம் இல்லை.

தற்பொழுது எமக்குத் தேவையானது பதவிகளல்ல. ஐக்கிய தேசியக் கட்சியை விரட்டியடிப்பதேயாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

« PREV
NEXT »

No comments