யாழ். சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இன்று (08) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments
Post a Comment