தடை செய்யப்பட்ட அமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
க்ளோபல் தமிழ் போரம் அமைப்புடன் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தை கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்துவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்ற போதிலும், தடை செய்யப்பட்ட இயக்கமொன்றுடன் சந்திப்பு நடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் மீது கடந்த அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. க்ளோபல் தமிழ் போராம் அமைப்பினை சந்தித்தமைக்காக மங்கள சமரவீரவை கைது செய்ய வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகத்தை தலையீடு செய்ய முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் சுபி நென்டி, வட மாகாணசபையை அரசாங்கம் எனக் குறிப்பிட்டிருந்ததாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment