Latest News

June 08, 2015

காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களை சந்தித்தார் தோனி!
by Unknown - 0

தமிழகமே இன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படம் காக்கா முட்டை.

இப்படம் ரிலிஸாவதற்கு முன்பே தேசிய விருதுகளை குவித்தது. இதில் நடித்த சிறுவர்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த இரு சிறுவர்கள் தோனியின் தீவிர ரசிகர்களாம், இதை படக்குழுவினர்கள் அறிந்து ஐ.பி.எல் போட்டியின் போது சென்னை வந்த தோனியிடம் இதை தெரிவிக்க, அவரும் உடனே சம்மதித்து விட்டாராம்.

இவர்களை சந்திக்கையில் தோனி நிறைய பரிசுப்பொருட்களை கொடுத்து, சினிமாவில் மட்டும் கலக்கினால் போதாது, படிப்பிலும் கலக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளாராம்.
« PREV
NEXT »

No comments