Latest News

June 24, 2015

கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை பறிபோகும் அபாயம்!
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ யுத்தம் ஆரம்பித்ததே தரகு பணம் பெற்றுக் கொண்டு என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து முறையாக விசாரணை நடத்தி சட்டத்தை செயற்படுத்தினால் கோட்டாபயவிற்கு பிரஜாவுரிமை பறிபோகும் அபாயம் உள்ளதென அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே மங்கள சமரவீர இவ்வாறு கூறினார்.

தான் வெளியிடும் கருத்து பொய் என்றால் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு மங்கள சவால் விடுத்துள்ளார்.

2006ம் ஆண்டு 4 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் யுத்த காலம் என்பதால் அது கணக்கிலெடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு இணைப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் லண்டன் அலுவலகம் என்று ஒன்று இல்லை எனவும் பிரிடிஸ் வர்ஜூனியா என்ற நிறுவனம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் கும்பலுக்குச் சொந்தமானதெனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்த கொடுக்கல் வாங்கலுடன் யுக்ரேன் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு இருப்பதாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

உதயங்கவின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுதாகவும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments