இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இரு வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சஸ்சக்ஸ் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் சஸ்செக்ஸ் அணியுடன் சர்ரே அணி மோதியது.
முதலில் விளையாடிய வந்த சசெக்ஸ் அணி 18.4 ஓவர்களுக்கு 141 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அப்போது களத்தடுப்பில் ஈடுபட்டிக் கொண்டிருந்த சர்ரே அணியின் வீரர்கள் ராரி பர்ன்சும், மொய்சஸ் ஹென்ரிக்சும் பிடியெடுப்பு முயற்சியில் பலமாக மோதிக் கொண்டனர்.
இதனால் நிலைகுலைந்த இருவரும் மைதானத்தில் சுருண்டு விழுந்தனர். அவர்கள் மைதானத்தில் கிடந்த நிலை சக வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மைதானத்திற்கு 3 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.
இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
No comments
Post a Comment