கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
இவ் வழக்கு தொடர்பில் சாட்சியளிக்கையில்,
நான் வீட்டிற்குப் போன சமயத்தில் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு துண்டு வெட்டிய விடயத்தை அவர்களுக்கு அறிவித்துவிட்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இருந்த சமயத்தில் செஞ்சிறுவைச்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் எனது கரவெட்டி மேற்கில் உள்ள மேற்கில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
வந்தபொழுது நேரம் காலை 09:00,10:00 மணி இருக்கும். பிரதிநிதி வந்து நடந்த சம்பவத்தைப் பற்றி என்னிடம் விசாரித்து குறிப்பெடுத்துக் கொண்டார்.
அச்சமயத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எமது வீட்டிற்கு அருகில் வந்து நின்றன். அதில் இராணுவத்தினர் வந்ததாக அறிந்தேன். இராணுவத்தினரைக் கண்டபோது வீட்டிலிருந்தவர்களுக்கும் அயலவர்களும் குழறினார்கள்.
அச்சமயத்தில் யாரோ ஒருவர் நெல்லியடியிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் ஈ.பி.டி.பி அமைப்பினரும் எமது வீட்டிற்கு வந்தனர்.
அச்சம்பவம் பற்றி என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்த ஐ.சி.ஆர்.சி இன் பிரதிநிதி எம்மையெல்லாம் பயப்படாமல் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு வெளியே சென்று விசாரித்துவிட்டு திரும்பிவந்து மிருசுவில் கொமாண்டர் வந்திருப்பதாகவும், நடந்த சம்பவம் பற்றி என்னை விசாரிக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
No comments
Post a Comment