கிளிநொச்சி – உருத்திரபுரம் பிரதேசத்தில் காணாமல் போன 3 வயது சிறுமியின் தாயார் வழங்கியுள்ள தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, தனது கள்ளக் காதலனுக்கு குழந்தையை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் குழுவொன்று நேற்று (24) தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளது.
குழந்தையின் தாய் வழங்கிய தகவலுக்கு அமைய பல இடங்களில் குழந்தையை தேடிய போதும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி – உருத்திரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமியான உதயகுமார் யர்சிகா கடந்த சில தின ங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். சிறுமி வசித்த வந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதும் அவர் கிடைக்கவில்லை.
சிறுமி தாயாருடன் குளிக்கச் சென்றிருந்த வேளையிலேயே காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வழங்கப்பட்டதால் , தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தாயார் மேலும் ஒரு தகவலை வழங்கியுள்ளார்.
No comments
Post a Comment