பிணை வழங்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருந்த சிகிச்சை பெற்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பங்கேற்க இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment