ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி செல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட மாநாடு இன்று (21) நுவரெலியா மா நகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்.."என் மீது நம்பிக்கை வைத்து கட்சியை பொறுப்பளித்துள்ள நிலையில் அனைவருடனும் சேர்ந்து ஒற்றுமையுடன் போட்டியிட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்கும் தேவையே எனக்கும் உள்ளது,இரண்டு தலைவர்களால் நாட்டை கொண்டு செல்ல முடியாது. ஒரு தலைவருடன் செயற்பட வேண்டும்."
நவீனமயப்படுத்தப்பட்டு வரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார். 6 மாடிகளுடன் இந்த வைத்தியசாலை அனைத்து வசிதிகளும் உள்ளடக்கியதாக நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
No comments
Post a Comment