எமது ஆறு பேர் கொண்ட குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கதைத்தோம். அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கொழும்பில் வைத்து எதிர்வரும் புதன்கிழமை பேசவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் ஒரே மேடையில் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு, ஆறு பேர்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் சார்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் கொண்டுவர வேண்டும் என்பது இந்நாட்டில் உள்ள 90 வீதமானோரின் எதிர்பார்ப்பாகும். இந்த செயற்பாட்டை நாம் கைவிடப் போவதில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சந்தர்ப்பவாதிகளின் நடவடிக்கைக்கு சரியான பதிலை நாம் வழங்குவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment