உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தம்முடனே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று மதவழிபாடுகளில் ஈடுபட்ட அவர், பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களே தம்வசம் இருக்கின்றனர்.
கட்சியை விட்டுச் சென்ற தலைவர் என்று தம்மை மாத்திரமே குறைகூறமுடியாது.
கட்சியுடன் இணைந்த நாள் முதல் அதே கட்சியிலேயே இருந்து வருகிறேன்.
எனது வயதை கவனத்தில் கொண்டு தம்மை பாட்டன் என சிலர் கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment