முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்கில் புதிய பத்திரிகையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெருமவினால் இப்பத்திரிகை வெளியிடப்படவுள்ளதாக லங்கா ஈ நியூஸ் தெரிவிக்கிறது.
நிஜபிம என்னும் பெயரில் இந்தப் பத்திரிகை வெளியிடப்பட உள்ளது.
இது தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை அபயாராமயவில் நடைபெற்றுள்ளது.
ரவி விஜேரட்ன, ருவன் பெர்டினான்டஸ், பந்துல பத்மகுமார, ஜனக பிரியந்த பண்டார, டிரான் அலஸ், மனுஸ நாணயக்கார போன்றவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக லங்கா ஈ நியூஸ் தெரிவிக்கிறது.
No comments
Post a Comment