யாழ்ப்பாணம், மந்துவில் கேலத்து அம்மன் கோயிலின் கும்பாபிஷேக தினத்தன்று இரவு கோயிலில் உறங்கிக் கொண்டிருந்த 8 இளைஞர்கள் கணாமற்போய் ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரையில் அவர்களுக்கு நடந்தது என்னவென்று தெரியாதுள்ளது.
ஒரே இரவில் 8 குடும்பங்களின் மகிழ்ச்சி, கனவு, எதிர்பார்ப்பு அனைத்தும் சிதறடிக்கப்பட்டன.
காணமாற்போனவர்கள் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோருக்கு ஏமாற்றமே ஒவ்வொரு நாளும் மிஞ்சுகிறது.
பிள்ளைகள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை மாத்திரமே கண்ணீர் மற்றும் துயரத்தைக் கடந்து காணாமற்போன இளைஞர்களின் பெற்றோரை வாழச் செய்கிறது.
ஒன்பது வருடங்களாக பிள்ளைகளின் வரவிற்காகக் கண்ணீருடன் காத்திருக்கும் உறவுகளுக்கு நல்லாட்சியிலாவது பதில் கிடைக்குமா?
No comments
Post a Comment