காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்றைய மூதூர் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை விசாரணை நடைபெற்ற போது செயலகத்திற்கு வெளியில் ஒன்றுதிரண்ட மக்கள் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விசாரணைக்கு அளைக்கப்பட்ட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தங்களக்கு நம்பிக்கை இல்லை, சர்வதேச தரத்திலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 11.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments
Post a Comment