Latest News

June 27, 2015

கிளிநொச்சி ஊற்றுப்புலம் மாற்றுவலுவுள்ளோர் சங்கத்துக்கு புலம்பெயர் தமிழர் நிதி உதவி
by admin - 0

பிரித்தானியாவில் வசித்துவரும்  எஸ்.பாஸ்கரன் குடும்பம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் சிறிகரனிடம் ரூபா ஒரு லஞ்சம் கையளிந்துள்ளர். இந்நிகழ்வு 22-06-2015 கிளிநொச்சிதமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்துகொணடு சிறப்பித்தார்.




புலம்பெயர்ந்து இலண்டனில் வசிக்கும் பாஸ்கரன் நேரடியாக வந்து போராலும் மற்றும் பிறப்பிலும் மாற்றுவலுவுள்ளவர்களாக காணப்படும் கிளிநொச்சி ஊற்றுப்புலம் மாற்றுவலுவுள்ளோர் குழுவுக்கு ரூபா. 1 இலட்சம் பணத்தை வழங்கியுள்ளார்.இந்த நிகழ்வு கடந்த 22ம் நாள் நடைபெற்றது.

இதில் நிதியுதவியை பெற்றுக்கொண்ட ஊற்றுப்புலம் மாற்றுவலுவுள்ளோர் குழுவின் தலைவர் சிறீகரன் (ரவி) உரையாற்றுகையில்

எமது மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுவலுவுள்ளவர்கள் பல்வேறு போராலும் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை குடும்பத்தை கொண்டு நடத்த சிரமப்படுகின்ற வேளையில் புலம் பெயர் உறவுகளின் உதவி மாற்றுவலுவுள்ளவர்களின் வாழ்வில் நம்பிக்கையை தந்திருக்கின்றது.

அந்த வகையில் இலண்டன் வாழ் எமது உறவான சகோதரன் பாஸ்கரன் பா.உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இந்த பேருதவியை வழங்கியிருப்பது மிக்க மகிழ்;ச்சிக்கும் நன்றிக்கும் உரியது.

நாம் பல்வேறு இடங்களில் எமக்கு உதவியை கோரியிருந்தபோதும் முதலில் எம்மை ஒரு பொருட்டாக கணித்து எமது தேவையை மாற்றுவலுவுள்ளவர்களின் கஸ்டத்தை உணர்ந்து பா.உறுப்பினர் அவர்கள் எம்மை எமது ஊற்றுப்புலம் மாற்றுவலுவுள்ளோர் அமைப்பை தெரிவு செய்திருப்பதற்கு நாம் நன்றி கூறுகின்றோம்.

நாம் எமது குழுவின் மூலம் மாற்றுவலுவுள்ளோரின் குடும்பங்களின் கல்வி மருத்துவம் வாழ்வாதாரம் சுயதொழில் போன்ற விடயங்களுக்கு சுழற்சி முறை கடன் திட்டங்கள் மூலம் உதவும் காரியத்துக்கு இந்த பணஉதவி பயன்படும் என்பதையும் அது நல்ல முறையில் மேம்படுத்தப்படும் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  மாற்றுவலுவுள்ளோர் சம்மேளன தலைவர் சிவமாறன் செயலாளர் விஜயலட்சுமி வரோட் அமைப்பின் இணைப்பாளர் சாந்தி, செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட கிளையின் துணைத் தலைவருமான பொன்.காந்தன் திருமதி.பாஸ்கரன் கலந்துகொண்டிருந்தனர்.

யுத்தத்தினாலும் வேறு காரணங்களினும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர் வறுமையினாலும் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகின்றனார் அவர்களுக்கு நல் உள்ளங்கள் தொடர்த்து உதவிகளை செய்ய முன்வருமாறு கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

எஸ்.செல்வதீபன்



« PREV
NEXT »

No comments