Latest News

June 07, 2015

உலகத் தமிழர் பேரவைக்கு(GTF) தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை யார் கொடுத்தது ?
by admin - 0உலகத் தமிழர் பேரவைக்கு(GTF) தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை யார் கொடுத்தது ?

 

இலங்கையில் போர் உச்சத்தை எட்டியவேளை வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக போராட்டங்களை நடத்த ஏதுவாக பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பேச்சாளராக இருந்த சுரேன் சுரேந்திரன்பல சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் தொடர்பாக நேர்காணல்களை வழங்கி அதன்மூலம் பிரபல்யமானார். பின்னர் அவருக்கும் BTF க்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து ,அவர் உலகத் தமிழர் பேரவை(GTF) என்ற அமைப்பை உருவாக்கி பிரிந்து சென்றார். பிரித்தானியாவில் இயங்கும் நாடு கடந்த அரசுக்கு(TGTE) மக்கள் வாக்குகளை போட்டு அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) அடிமட்டத்தில் இருந்து தமிழர்களோடு நெருங்கி பல செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அவர்கள் ஆண்டுதோறும் மாவீரர் தினத்தை நடத்துகிறார்கள்.

 

அதுபோக பல உலக நாடுகளில் உள்ள மக்கள் பேரவை அந்த நாடுகளில் உள்ள பல நூறு தமிழர்களால் ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பு. இதே வரிசையில் கனடாவில் உள்ள கனேடிய தமிழ் காங்கிரசும்(CTC) பெரும் ஆதரவைப் பெற்ற அமைப்பாகும். ஆனால் எந்த ஒரு தமிழர் நிகழ்வுகளையும் நடத்தாமல். தமிழர்களின் ஆதரவினை சிறிதளவும் உள்வாங்காத இந்த உலகத் தமிழர் பேரவை(GTF) தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்து இயங்கி வருவது கண்டிக்கத்தக்க விடையம் ஆகும். தென்னாபிரிக்க அரசில் முன்னர் அமைச்சராக இருந்த றோயல் படையாச்சி என்னும் இந்திய வம்சாவளி நபரை வைத்து ,காய் நகர்த்தியது GTF. அவர் இறந்த பின்னர் அவரின் உறவினர் ஊடாகவே தற்போதும் தென்னாபிரிக்க அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது உலகத் தமிழர் பேரவை.

 

இதன் ஒரு அங்கமாகவே நேற்றைய தினம்(சனிக்கிழமை)  மற்றும் இன்றைய தினம் என சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளது. ஆனால் இதில் வேறு எந்த தமிழ் அமைபுகளும் கலந்துகொள்ளவில்லை.

 

பல அமைப்புகளை புறம் தள்ளி தாமே தமிழர்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறி உண்மைக்கு புறம்பான வகையில் இவர்கள் செயல்படுவது ஜனநாயக மரபுகளை மீறும் அப்பட்டமான செயலாக உள்ளது. ஒரு நாட்டில் உள்ள தனியொரு அமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி அதனூடாக தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமா. அதுபோக உலகத் தமிழர் பேரவையிடம் 4 தூண்கள் என்று சொல்லப்படும்(4 piller)  என்கிற அவர்களது கொள்கை தான் கைகளில் இருக்கிறதே தவிர road map என்று சொல்லப்படக் கூடிய ஒரு தீர்வுத் திட்டப் பொதி ,கைகளில் இல்லை.

 

தமிழர்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று இவர்கள் கூறினால்அது எதுமாதிரியான சுயாட்சி என்று கூற இவர்கள் கைகளில் என்ன சட்ட வரைபு இருக்கிறது என்று கேட்டால் எதுவுமே கைகளில் இல்லை. இவர்கள் ஒரு முறை மக்கள் வாழ்வாதாரம் பற்றி பேசுகிறார்கள். மறு முனையில் விதவைகள் வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இன்னொரு கோணத்தில் தொழில் நுட்ப்ப வளர்சி பற்றி பேசுகிறார்கள். அதுபோக அரசியல் தீர்வு குறித்தும் பேசுகிறார்கள். உலகத் தமிழர் பேரவையைப் பொறுத்தவரை இதுவரை அவர்களிடத்தில் சரியான ஒரு சட்ட வரைபு இல்லை என்பதே அவர்கள் செய்துள்ள முதல் பிழையாக பார்கப்படுகிறது. அதுபோக அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். எனவே தன்னிச்சையாக மற்றும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் GTF  ஈடுபடுவதை உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் (GTAJ) வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை உடனே நிவர்த்திசெய்ய அனைத்து தமிழர் தரப்புகளும் அரசியல் ஆலோசகர்களும் மற்றும் செயல்பாட்டாளர்களும் களத்தில் இறங்கவேண்டும் என்று நாம் வேஎண்டி  நிற்கிறோம்.

 

நன்றி

 

உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் (GTAJ) 

« PREV
NEXT »

No comments