அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
ஜி.வி.பிரகாஷுக்கு இப்படம் 50-வது படமாகும். ஏற்கெனவே விஜய் கூட்டணியில் ‘தலைவா’ படத்தின் பாடல்களும், அட்லி கூட்டணியில் ‘ராஜா ராணி’ படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இதனால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு தீவிரமாக இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பாட வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்காக ஜி.வி.பிரகாஷ் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியதாகவும், அவரும் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷின் 50-வது படம் என்பதால் இப்படத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரை பாட வைக்க இருப்பதாக ஜி.வி.பிரகாஷுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment