தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று வியாழனன்று (25/06/2015) இடம்பெறுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Accountability for Sri Lanka, International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைவில் இடம்பெறுகின்ற இந்த உப மாநாடு 9ம் இலக்க மண்டபத்தில் மதியம் 15h30க்கு இடம்பெறுகின்றது.
Hybrid பொறிமுறையென விழிக்கப்படுகின்ற வெளிநாடும் உள்நாடும் இணைந்ததான கலப்பு விசாரணை பொறிமுறைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு பல்வேறு உலகத் தரப்புக்களும் எத்தனித்து வருகின்றன.
இந்நிலையில் அனைத்துலக விசாரணையே சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு தகுந்த பொறிமுறை என்பதனை வலியுறுத்தும் வகையில் Accountability for Sri Lanka: Will Hybrid Mechanism Work? எனும் தலைப்பில் இந்த உப மாநாடு இடம்பெறுகின்றது.
கம்போடியாவினை மையப்படுத்தி ஐ.நா விசாரணை விவகாரத்தில் முக்கியநபராக பங்காற்றியிருந்த பிரபல சட்டவாளர் Hon. Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence) அவர்கள் இந்த உப மாநாட்டில் பங்கெடுக்க இருப்பதோடு ICPPG மையத்தின் தலைவர் பேராசிரியர் சொர்ணராஜா அவர்களும் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்துக் கொள்கின்றார்.
ஐ.நாவுக்கான மொரிசியஸ் தூதரகத்தின் வர்தக விவகாரங்களுக்கான முன்னாள் பிரதிநிதியாக இருந்த Dr. Narsinghen Hambyrajen (Professor of Law, Former Minister Counselor Trade Division, Permanent mission of Mauritius in Geneva) அவர்கள் இந்த உப மாநாட்டினை தலைமை தாங்கிவிருக்கின்றார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் இக்கூட்டத் தொடரில் இடம்பெறுகின்ற இரண்டாவது உப மாநாடு இதுவென்பது இங்கு குறிப்பிடதக்கது.
No comments
Post a Comment