சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்தின் தோல்வியிலிருந்து இப்போது மீண்டு, அடுத்த படத்தில் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் படி ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ’அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்குகிறார். படத்தின் இசை சந்தோஷ் நாரயணன், ஒளிப்பதிவு முரளி ஜி. பாடல்கள் கபிலன், உமாதேவி, கானா பாலா. நடனம் சதீஸ், எடிட்டிங் ப்ரவீன் KL.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் தொடங்கி 60 நாட்கள் நடைப்பெறவுள்ளது. இதை தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய பகுதியில் நடைப்பெறுமாம்.
No comments
Post a Comment