Latest News

June 01, 2015

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசகர்களாக சச்சின்,கங்குலி லக்ஷ்மன் நியமனம்!
by Unknown - 0

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசகர்களாக சச்சின் டெண்டுல்கர், சௌரோவ் கங்குலி மற்றும் வீ.வீ.எஸ். லக்ஷ்மன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையில் இன்று காலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக சபையின் செயலாளர் அனுரக் தாகூர் தெரிவித்துள்ளார்.

தலைவர் ஜக்மோகன் டால்மியா மற்றும் செயலாளர் அனுரக் தாகூர் ஆகியோரின் எண்ணக்கருவிலேயே இந்த ஆலோசனைக் குழு ஸ்தாபிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்காலத்தில், கிரிக்கட் சபை முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் இவர்களின் ஆலோசனைகளை பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியின் இயக்குனர் போன்றவர்களை நியமிப்பதற்கு முன்னர் இன்று நியமனம் பெற்ற ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த மாத இறுதியில் இந்திய அணி பங்களாதேஷிற்கு செல்லும் போது, ரவி சாஸ்திரி அந்த குழுவில் இணைந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரவி சாஸ்திரிக்கு பதிலாக இன்று ஆலோசகர்களாக நியமனம் பெற்றவர்களில் ஒருவர் பங்களாதேஷ் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தவிர, இந்த ஆலோசனைக் குழு எதிர்வரும் காலங்களில் இந்திய கிரிக்கட் நிர்வாகத்திற்கும், அணிக்கும் இடையே இணைப்பாளர்களாக தொழில்படுவர் எனவும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments