Latest News

June 01, 2015

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக- கையெழுத்து சேகரிக்கும் தமிழக இளைஞர்கள்
by Unknown - 0

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக செயலாற்றத் தொடங்கியுள்ளது.

பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் www.tgte-icc.org எனும் இணைய மூலமும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து இயக்கமானது சமீபத்தில் தமிழகத்திலும் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது.

ஈழத்தில் அநியாயமாக கொன்று குவிக்கப்பட்ட நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு நீதிகிடைக்க உங்கள் கையெழுத்து எனும் ஆயுதத்தினை உபயோகியுங்கள் எனும் முழக்கத்துடன் புதுக்கோட்டை மற்றும் கன்னியாக்குமாரி மாவட்டங்களில் தமிழர் இளைஞர் ஒன்றியத்தினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

புதுக்கோட்டடையில் தோழர் திவாகர், கன்னியாக்குமாரியில் தோழர் மகேஸ் தானுமூர்த்தி ஆகியோரது தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக்கையெழுத்து இயக்கத்தினை சமீபத்தில் தமிழகத்தில் தொடங்கிய போது காணொளி மூலமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கூறியதாவாது :

இலங்கை குறித்த ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009-ஆம் ஆண்டு போரின்போது முதல் ஆறு மாதங்களில் 70,000 தமிழர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஒரு உள்நாட்டு அமைப்போ அல்லது வேறொரு வெளிநாட்டு ஒத்துழைப்புடன் கூடிய உள்நாட்டு அமைப்போ தமிழ் மக்களுக்கு நீதியை அளிக்காது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள சிறிலங்கா அரசாங்கம் ஒரு உள்நாட்டு அல்லது கலப்பு அமைப்பைக் கோருவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கை அரசை நிறுத்தும் கோரிக்கையை திசை திருப்புகிற, தாமதப்படுத்துகிற முயற்சியாகும்.

மேலும், சிறிலங்கா அரசும், நீதித்துறைம் இன ரீதியாக நடுநிலையாக இல்லை. தமிழர்களுக்கு நீதி வழங்கும் அரசியல் உறுதிப்பாடு சிறிலங்காவில் இல்லை. எனவே, அதிபர் மாற்றப்பட்டுவிட்டாலும் கூட, தமிழர்கள் தொடர்பான அரசியல் சூழல் மாறவில்லை.

போரின் முடிவில் ராணுவ படைத்தலைவராக இருந்த தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தில் முதுநிலை பதவிகளில் இருக்கிறார்கள். ராணுவம் இன்னமும் அவ்வாறே உள்ளது. வட கிழக்குப் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தமிழர்களிடையே அச்சத்தை நீடிக்கச் செய்கிறது. மேலும் இந்த நடவடிக்கை அங்கு அன்றாட நடவடிக்கைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகள் உள்நாட்டு அல்லது கலப்புத் தீர்ப்பாயத்தின் முன்பு உண்மையில் சுதந்திரமாக இருப்பதற்கு சாத்தியமில்லை.

எனவே, இந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு இலங்கையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்றினை ஐ.நா சபை நிறுவ வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
*** நீங்களும் வாக்களிக்க இங்கே அழுத்தவும் - Click Here 








« PREV
NEXT »

No comments