இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவின் உதவி அவசியம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. பல்வேறு வழிகளின் மூலம் வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை பிரதிநிதிகள் அண்மையில், பிரித்தானியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போது இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக உளவியல் பாதிப்புக்களினால் அவதியுறும் மக்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments
Post a Comment