பழைய முறிகண்டி கொக்காவில் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவவிடத்திலேயே பலியானதுடன் , கிளிநொச்சி வைத்திய சாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த ஆணொருவரும் தற்போது சிகிச்சை பயனின்றி சாவடைந்துள்ளார் .
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment