Latest News

June 15, 2015

கரும்புலிகள் நாளில் கோடைக் கொண்டாட்டமா..? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.!!
by admin - 0

கரும்புலிகள் நாளில் கோடைக் கொண்டாட்டமா..? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.!!

வீரம் விளைந்த வல்வை மண்ணுக்கே கேவலம் இது.!! 

"மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்" என்றார் தேசியத்தலைவர். 

அத்தோடு....

"கரும்புலிகள்" எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள். போராட்டப்பாதையின் தடைநீக்கிகள்! எதிரியின் படைபலத்தை உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்" என்றார் அவர். 

கரும்புலிகள் நாள் என்பது, அமுதன் கரும்புலி கப்டன் மில்லர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட நாள், அந்த நாளை "கரும்புலிகள் நாள்" எனப் பிரகடனப்படுத்தி. ஆண்டு தோறும் அந்த நாளை கரும்புலிகள் நாள் என அனுட்டித்து வரும்வேளையில், அந்த நாளைக் "கோடைக் கொண்டாட்ட நாளாக" கொண்டாட நினைப்பது பல்லாயிரக்கணக்கான மாவீரச்செல்வங்கள் மற்றும் கரும்புலிகளை அவமதிக்கும் செயலாகவே எண்ணத் தோன்றுகின்றது. 

ஏற்பாட்டாளர்கள் நினைப்பதைப் போன்று அல்லது சொல்வதைப் போன்று எல்லாம் முடிந்து போய்விடவில்லை.  

"ஆயுதங்கள் மௌனிக்கப்படுகின்றன" என்று தேசியத் தலைவர் சொன்னாரே தவிர, எல்லாம் முடிந்து போய்விட்டதாக அவர் சொல்லவில்லை. புலம்பெயர் நாடுகளில் கரும்புலிகள் நாள் அனுட்டிக்கப்படும் போது; விடுதலைப் போராட்டத்திற்கு அத்திவாரக் கற்களாக விளங்கிய நாம் - உலகமே போற்றும் உத்தமத் தலைவரின. மண்ணுக்குச் சொந்தக்காரங்கள் எனக் கூறிக்கொள்ளும் நாம் தவறு செய்யலாமா? 

இலண்டன் வாழ் வல்வை மக்களே சிந்தியுங்கள். "கோடை விழாவை" எப்போது வேண்டுமானாலும நடத்திக் கொள்ளலாம், கரும்புலிகள் நாளை ஜூலை 5 ஆம் நாளே அனுட்டிக்க முடியும்.!

விதண்டாவாதங்கள் வேண்டாம்! வீண் பிடிவாதங்கள் வேண்டாம் !! கரும்புலிகளுக்கு மதிப்பளியுங்கள். தேசியத் தலைமைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதீர்கள்.

இது வல்வை மகன் ஒருவனின் பணிவான வேண்டுகோள்,

- தேவர் அண்ணா (வல்வைக்குமரன்)
« PREV
NEXT »

No comments