யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 12 கிலோ 800 கிராம் நிறை கொண்ட சி-4 வெடி மருந்தினை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தாக கூறி பெண் ஒருவர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படிப் பகுதியினைச் சேர்ந்த 43 வயதான குடும்பப் பெண்னே இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியினைச் சேர்ந்த தூரத்து உறவினர்கள் இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருகைதரும் போது தனது வீட்டில் ஒரு பையினை வைத்துவிட்டுச் சென்றார்கள்.
வேறு ஒரு நாள் வருகின்ற போது அந்த பையினை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் இதுவரையில் அந்தப் பையினை எடுப்பதற்கு அவர்கள் வரவில்லை. அதற்குள் இருந்தது வெடிமருந்து என்று தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெடிமருந்தினைக் கொண்டுவந்த பளைப் பகுதியனைச் சேர்ந்த இருவரையும் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
No comments
Post a Comment