Latest News

June 20, 2015

வைத்தியசாலையில் கடமையாற்றியதற்காக தடுத்து வைத்துள்ள இராணுவம்
by admin - 0

புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலையில் கடமையாற்றியதற்காக கடந்த ஆறு வருடகாலமாக தம்மை தடுத்து வைத்திருப்பதாக புனர்வாழ்வு பெற்று வரும் பெண் ஒருவர் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் முறையிட்டுள்ளார். 

வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் பெண் ஒருவர் உட்பட 52 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அவர்களை சனிக்கிழமை மாலை மகளிர் விவகார பிரதிஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் போதே புனர்வாழ்வு பெற்று வரும் பெண் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,


விடுதலை புலிகள் அமைப்பில் நான் போராளியாக இணைந்திருக்கவில்லை . பொன்னம்பலம் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தேன்.

இறுதி யுத்தத்தில்  இராணுவத்தினரிடம் சரணடைந்து இருந்தேன். அவர்கள் என்னை கைது செய்து தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைத்து இருந்தார்கள்.

தற்போது தான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள் நீதிமன்றம் எம்மை ஒரு வருடகாலத்திற்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்த உத்தரவு இட்டுள்ளது. நீண்டகாலமாக எம்மை தடுத்து வைத்திருந்ததை கருத்தில் கொண்டு எமது புனர்வாழ்வு காலத்தை குறைத்து எம்மை விரைவில் விடுதலை செய்யவேண்டும் என கோரி இருந்தார்.

இது தொடர்பில் சட்டமா அதிபருக்கும், ஜனாதிபதிக்கும், தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் அவர்களுக்கு உறுதி அளித்தார்.
« PREV
NEXT »

No comments