Latest News

June 20, 2015

எய்ட்ஸ்,எபோலா, மெர்ஸ்,சார்ஸ்,கேன்சர் ஆகிய ஆட்கொல்லி நோய்களுக்கு ஒரே மருந்து எம்மிடம் உண்டு. வடகொரியா அதிரடி.
by admin - 0

உலக அளவில் அச்சத்தை உருவாக்கியுள்ள எய்ட்ஸ்,எபோலா, மெர்ஸ்,சார்ஸ்,கேன்சர்  ஆகிய ஆட்கொல்லி நோய்களுக்கு  மருந்து கண்டுபிடித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

அணு ஆயுதம் தயாரிப்பதாக வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புகார் தெரிவித்து வருகின்றன. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வட கொரியா, தனது முயற்சியில் பல சாதனைகளை சத்தமின்றி செய்து வருகிறது.

அங்கு நடப்பது உலக நாடுகளுக்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகிறது. இந்த நிலையில் எய்ட்ஸ்,எபோலா, மெர்ஸ்,சார்ஸ் ஆகிய ஆட்கொல்லி நோய்களுக்கு  மருந்து கண்டுபிடித்துள்ளதாக தற்போது வடகொரியா ஒரு அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

அந்த நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளதாக வடகொரியாவின்   மின்ஜோக் தாங்ஷின் என்ற அரசு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மருந்தின் பெயர் கும்டாங் – 2.  இது ஒரு ஊசி மருந்து ஆகும்.

எய்ட்ஸ், எபோலா, மெர்ஸ், சார்ஸ் உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களைக் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் அச்சத்தின் பிடியில் இருக்கின்றன.

இந்த மருந்து மெர்ஸ், எய்ட்ஸ், எபோலா, சார்ஸ் போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய்களுக்கு தடுப்பு ஊசியாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 1996 ஆம்  ஆண்டே தயாரிக்கப்பட்டது.

கடந்த 2006 மற்றும் 2013 ஆம்  ஆண்டுகளில் வட கொரியாவில் பறவைக்காய்ச்சல் நோய் கடுமையாகப்  பாதித்தது.

அப்போது இந்த ஊசி மருந்துதான் பயன்படுத்தப்பட்டது.இதனால் ஏராளமானோர் உயிர் பிழைத்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது



« PREV
NEXT »

No comments