Latest News

June 20, 2015

சவுதி தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிடவுள்ளது விக்கிலீக்ஸ்!
by Unknown - 0

அமெரிக்கவின் அரசு தரப்பு இரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ், சவுதி அரேபியா தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து விக்கிலீக்ஸ் தனது அறிக்கையில்; ஏற்கெனவே 60,000 ஆவணங்களை வெளியிட்டுள்ளோம், என்றாலும் பெரும்பாலும் அவர் அரபு மொழியில் இருப்பவை’ என்று கூறியுள்ளது.

இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை உடனடியாக சரிபார்க்க வழியில்லை எனினும் விக்கி லீக்ஸ் கடந்த காலங்களில் அரச ஆவணங்களை வெளியிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஆவணங்களும் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

சவுதி அரேபிய அரசின் உள்விவகாரங்கள் பல வெளி உலகுக்கு தெரியாதவை, இந்த ஆவணங்கள் உண்மையெனில் சவுதி அரேபியாவின் அரசியல் சாணக்கியங்களும் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments