பிரிட்டன் நாட்டை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் கண்களை சயமாக பரிசோதனை செய்து கொள்ளும் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.
பீக் (Portable Eye Examination Kit (Peek) app என பெயரிடப்பட்டுள்ள இந்த மென்பொருள் ஸ்மார்ட்போனில் உள்ள கமரா மூலம் 3D பிரிண்டர் அடாப்டருடன் இணைந்து கண்களை பரிசோதித்து சொல்கிறது.
இந்த மென்பொருள் கென்யாவில் உள்ள 233 பேரிடம் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில், வழக்கமாக, மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்தும் கண் பரிசோதனை சார்ட்டுகளை போலவே இந்த மென்பொருளும் நன்றாக வேலை செய்தது.
அதேபோல், பார்வைக் குறைபாடுகளை கண்டறிய இந்த மென்பொருள் ஸ்மார்ட்போனில் உள்ள கமரா பிளாஷ் மற்றும் ஒட்டோ-போகஸ் வசதியை பயன்படுத்துகிறது.
அதேபோல், ஸ்மார்ட்போனில் உயர் தொழில்நுட்ப தரம் வாய்ந்த கமரா இருந்தால், கெட்றாக்ட் போன்ற தீவிர கண் நோய்களையும் கூட கண்டறிந்து விடுகிறதாம் இந்த மென்பொருள்.
No comments
Post a Comment