மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நாளை (17) கொழும்பில் பேரணி ஒன்றையும் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல், தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுதல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவையை நிறைவேற்றுதல், தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், மருந்து கொள்கையை செயற்படுத்துதல், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மஹாபொல புலமைப் பரிசில் தொகையை 5 ஆயிரமாக உயர்த்துதல், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரித்தல், அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குதல் உட்பட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பேரணி நாளை பிற்பகல் 3 மணிக்கு புஞ்சி பொரள்ளை சந்தியில் ஆரம்பமாகவுள்ளதுடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

No comments
Post a Comment