தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தாம் இதனைக் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தாமாகவே முன்வந்து எதனையும் செய்வதில்லை எனவும், தமிழ் மக்கள் அழுத்தங்களை பிரயோகித்தால் மட்டும் உதவிகளை பெற்றுக் கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச அழுத்தங்கள் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
படையினர் காணிகளை வழங்கியுள்ள போதிலும் செழிப்பான காணிகளை தொடர்ந்தும் தம் வசம் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் படையினர் பாரியளவில் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment