இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் சில பாடசாலைகளில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையை அளிப்பதாக அமைச்சர் கூறினார்.
இதற்கமைய கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச் சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வீ.இராதாகிருஷ்ணன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments
Post a Comment