Latest News

May 26, 2015

மஹிந்த பிரதமராக வேண்டும்– வாசுதேவ
by Unknown - 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தான் திட்டமிட்டு திட்டவில்லை, எப்படியிருப்பினும் பிரதமரிடம் தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மனதின் தூண்டுதலினால் இப்படியான வார்த்தைகள் வெளியேறின. குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமருக்கு வாலை சுருட்டிக்கொள்ள நேரிட்டது.

எப்படியிருப்பினும் பிரதமரிடம் தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்ச ஜனநாயக அரசியலுக்கு பொருத்தமற்றவர்கள். எங்களுடைய அவசியம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவது மாத்திரமே.

எப்படியிருப்பினும் நாங்கள் மஹிந்தவுக்கு நடத்தை சான்றிதழ் வழங்க மாட்டோம். எங்கள ஜென்ம எதிரி ஐக்கிய தேசியக் கட்சியே. பெரும்பான்மை அதிகாரம் அற்ற தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்றிவிட்டு, எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மஹிந்த – மைத்திரி இணைந்த அரசாங்கம் ஒன்று உருவாக வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments