ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் பிடியாணைக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றிருந்தது.
எனினும், பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அவருக்கு 5 ஆயிரம் ரூபா ரொக்க பிணையும் 10 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
No comments
Post a Comment