இலங்கை அரச படையினரிடம் சரணடைந்த 110 பேரைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட இலங்கை நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவர் யாஸ்மீன் சூகா.
காணாமல் போன 110 பேர் பற்றிய தகவல்கள் சூகாவின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கை அரச படையினரிடம் சரணடைந்து பின்னர் காணாமல் போன 110 பேர் பற்றிய தகவல்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நூற்றுக் கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மற்றும் சிவில் நிர்வாகத் தலைவர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததனை பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நேரில் கண்டுள்ளனர்.
எவ்வாறெனினும், படையினரிடம் சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் பின்னர் காணாமல் போயுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே அவர்களை இறுதியாக கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சாட்சியங்கள் தற்போது இலங்கைக்கு வெளியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலவந்தமான காணாமல் போதல் தொடர்பில் நம்பகமான விசாரணகைள் நடத்தப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் சார்பில் யாஸ்மீன் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்
No comments
Post a Comment