Latest News

May 19, 2015

நீதி கோரி மில்லியன் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
by Unknown - 0

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான  இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும்  மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துப் போராட்டத்தை சமீபத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கி வைத்திருந்தது.

இதன் ஒரு அங்கமாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்குபதித்தப்பட்டிருந்த (மே 18​) மாபெரும் நிலைவேந்தால் நிகழ்வில் கையெழுத்து சேகரிக்கும் வேட்டையை நடாத்தியிருந்தது.

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெழுத்தினை பெறும் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

புலம்பெயர் நாடுகளில் மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் கையெழுத்தினை மக்களிடத்தில் நேரடியாக பெறும் செயற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேரடியாகவும் இணைய மூலமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்துப் போராட்டமானது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

*** நீங்களும் வாக்களிக்க இங்கே அழுத்தவும் - Click Here 



 





« PREV
NEXT »

No comments