Latest News

May 19, 2015

இலங்கை நிலைப்பாடு - ஐ.நா.அறிக்கை அடுத்த மாதம்!
by Unknown - 0

இலங்கையின் கடந்த வருடத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது நிலைப்பாட்டை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.

ஐ.நா அகதிகள் உரிமை தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா கிரேபியோ இதனை தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 29வது அமர்வு எதிர்வரும் ஜுன் மாதம் 13ம் திகதி முதல் ஜுலை மாதம் 3ம் திகதி வரையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது வருடாந்த அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளது.

இந்நிலையிலேயே இலங்கையில் கடந்தாண்டு நடவடிக்கைகள் குறித்து அறிக்கையொன்றை சமர்பித்து அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பதவியேற்றதன் பின்னரான இலங்கை குறித்த அறிக்கையில், இடம்பெயர்வு மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கின்றது எனவும், ஆட்சேர்ப்பு செயன்முறையின்போது துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான பல அனுபவங்கள் இலங்கை அகதிகளுக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதார மீளுருவாக்கம் முக்கியமாக காணப்பட்ட போதிலும், அதனை அகதிகள் உரிமைகளின் துருப்புச்சீட்டாக பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மிக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்பது உறுதி, அது வெறுமனே பதவியுயர்வுக்காக மாத்திரமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறுவதை தடுத்து அவர்களுக்கான தொழில்வாய்ப்பை பெற்று கொடுப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கைகளை தடுக்க முடியும் எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கையில் வருமானம் உழைக்கும் வாய்ப்புக்களை தோற்றுவிக்கமுடியும். குறிப்பாக கிராமப்புறங்கள் உட்பட பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்களுக்கு இடம்பெயர்வு என்பது ஒரு தேவையை விட தேர்வாகவே காணப்படுகின்றது.

அதேநேரம் நாட்டைவிட்டு வேறுநாட்டிற்கு சென்று குடியேறுவது என்பது எந்தவொரு தனிப்பட்ட நபரினதும் மனித உரிமையாகும்.

இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமானது என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரான்சுவா கிரேபியோ தனது அறிக்கையில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கைக்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments