எதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவதுஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில் இந்த விடயம் அடங்கியுள்ளது.அதில் ‘நாங்கள் இலங்கைத்தீவில் நல்லிணக்கம், மனித உரிமைகள் உட்பட போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளை ஊக்குவிப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் டேவிட் கமரன் கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் குறித்தும் அவர் தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
No comments
Post a Comment