ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தினேஸ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் இடதுசாரி முன்னணி ஆகியன இணைந்து கொழும்பு கிருலப்பனை லலித் அத்துலத்முதலி மைதானத்தில் மேதினக்கூட்டத்தை இன்று நடத்தின.
இந்த மேதினக்கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது.
இதன்போது மைதானத்துக்கு அருகிலேயே நிர்மல் தேவஸ்ரீயின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ரஞ்சித் தேவஸ்ரீ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு ரஞ்சித் தேவஸ்ரீ தரப்பினர் சிறப்பான ஆதரவை வழங்கியிருந்தனர்.
அத்துடன் மஹிந்தவின் ஆட்சியின் போது அந்த ஆட்சிக்கு எதிராக செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment