Latest News

May 13, 2015

பிரித்தானிய பொது தேர்தல் குறித்து ஆய்வு!
by Unknown - 0

பிரித்தானிய பொது தேர்தலின் போது, சுமார் ஐந்து லட்சம் இலங்கை தமிழர்களால் இலங்கை தமிழ் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்த ஆராய்வை இந்திய செய்திதாள் ஒன்று மேற்கொண்டுள்ளது.

இதன்படி, லண்டனில் வசிக்கும் மனித உரிமைகள் நடவடிக்கையாளரான ராஜ்குமார் என்பவர் பல்வேறு காரணங்களை இதற்காக முன்வைத்துள்ளார்.

இலங்கை தமிழர்களை பொறுத்தவரையில் பிரித்தானியாவில் அவர்கள் அண்மைகால குடிப்பெயர்வாளர்களாக உள்ளனர்.

அத்துடன் இலங்கை மற்றும் தமிழக அரசியலை ஒப்பு நோக்கும் அவர்கள் பிரித்தானிய அரசியலின் தன்மையை இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

இலங்கையிலும், தமிழகத்திலும் அரசியலை பொறுத்த வரையில் அது உண்மை தன்மையற்றது என்ற எண்ணம் இலங்கை தமிழர்கள் மத்தியில் உள்ளது.

இதனால், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் மத்தியில், அரசியலுக்குள் தமது உறவுகளை பங்கேற்க செய்யும் மனபாங்கு இன்னும் ஏற்படவில்லை.

பிரித்தானியாவில் வசிக்கும் மூன்றாம் தலைமுறை இலங்கை தமிழர்கள் மத்தியில் இன்னும் அரசியல் உள்வாங்கப்படவில்லை.

பெரும்பாலும் அவர்கள் பிரித்தானியா அரசியலை நோக்காது, ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடப்பவை தொடர்பிலே கவனத்தை செலுத்துகின்றார்கள்.

இந்தநிலையில், இலங்கை தமிழர்களின் மூன்றாம் தலைமுறையினர் அரசியலுக்குள் உள்வாங்கப்படுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் என ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த பொது தேர்தலில் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

உமா குமரனை பொறுத்தவரையில் தேர்தலில் தொழில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அவருடைய தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

யோகலிங்கத்தை பொறுத்த வரையில் அவர் பங்கேற்ற லிபரல் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவில் செல்வாக்கு மிக்கதாக அமைந்திருக்கவில்லை என்றும் ராஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், பிரித்தானிய பொது தேர்தலில், இந்தியர்கள் 10 பேர், ஒன்பது பாகிஸ்தானியர்கள், மூன்று பங்களாதேஷ் வம்சாவளிகள் மற்றும் இலங்கையின் சிங்களவர் ஒருவர் ஆகியோர் வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கது.
« PREV
NEXT »

No comments