Latest News

May 13, 2015

யாழ். பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட இறுதிப் போட்டி யூனியன், பல்கலைக்கழக அணிகள்மோதுகின்றன
by admin - 0

யாழ்ப்பாணம்,Jaffna sports news
யாழ். பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட இறுதிப் போட்டி யூனியன், பல்கலைக்கழக அணிகள் மோதுகின்றன
யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் மேசைப்பந்தாட்ட ஆண்,பெண் அணியினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ். மாவட்ட அழைப்பு கழகங்களுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட ஆண், பெண் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிகள் இன்று வியாழக்கிழமை பல்கலைக்கழக உடற்கல்விஅலகில் நடைபெறவுள்ளது.   பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஸ்ரீபாஸ்கரன் சிந்துஜா தலைமையிலான தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியை ரி. அபிதா தலைமையிலான யாழ். பல்கலைக்கழக அணி பி.ப 3.00 மணிக்கு எதிர்த்தாடவுள்ளது.
« PREV
NEXT »

No comments